January 31, 2023
சமையல்

அட்டகாசமான சுவையில் முட்டை பட்டர் மசாலா செய்து சாப்பிடலாம் வாங்க…!

இன்று நாம் அட்டகாசமான சுவையில் பன்னீர் பட்டர் மசாலாவைப் போன்ற சுவையுடைய முட்டை பட்டர் மசாலா செய்ய உள்ளோம். இது நன்கு க்ரீமியாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும்.

முட்டை பட்டர் மசாலா சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால், “சொர்கம் நண்பா சொர்கம்” என்று சொல்வீர்கள், அந்தளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.

மேலும் இதனை சப்பாத்தி, இட்லி,தோசை போன்றவற்றிற்கும் வைத்து சாப்பிடலாம். கொட்டி தீர்க்கும் இந்த மழையில் சூடாக இந்த முட்டை பட்டர் மசாலா செய்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

முட்டை – ஆறு

வெங்காயம் – இரண்டு

தக்காளி – மூன்று

இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

முந்திரி பருப்பு – பத்து

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த்தூள் – இரண்டு ஸ்பூன்

பட்டை – ஒரு இன்ச்

ஏலக்காய் – இரண்டு

லவங்கம் – மூன்று

உப்பு – தேவையான அளவு

பட்டர் -தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டையை குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் ஓட்டினை நீக்கி முட்டைகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் மற்றும் தக்காளியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பட்டர் சேர்த்து, பட்டர் உருகிய பின்னர் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின் முந்திரி பருப்பு சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

அடுத்ததாக பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

தக்காளி நன்கு மசியும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும்.

இப்போது மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அதன் காரத் தன்மை போகும் வரை வதக்கி விட வேண்டும்.

இப்போது இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து விட்டு, மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் பட்டர் சேர்த்து உருகிய பின், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்க வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

மசாலா கொஞ்சம் கெட்டியாக வந்த பிறகு, அதில் வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாகவோ வெட்டிப் போட்டோ அல்லது முழுமையாகவோ, ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

மசாலா முட்டையுடன் சேர்ந்த பிறகு அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் முட்டை பட்டர் மசாலா ரெடி…!

Related posts

Leave a Comment