டாப் 15

உலகில் இந்த இடங்களுக்கு நீங்கள் சென்றால் சாப்பிட வேண்டிய 15 நாடுகளின் உணவுகள்

உணவை தேடி பல நாடுகளுக்கு பயணம் செல்பவர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அந்த நாடுகளில் உள்ள மிகவும் சுவை மிகுந்த பிரபலமான உணவுகளை சாப்பிடுவதில் இவர்கள் கில்லாடிகள்.

ஏன் நமது நாட்டில் கூட பலரும் பிடித்த உணவுகளுக்காக பல இடங்களுக்கு தேடி தேடி சென்று உணவை சுவைத்து வருகிறார்கள். அப்படி சில இடங்களுக்கு சென்றால் இந்த உணவுகளையும் சுவைக்க மறக்காதீர்கள்.

1. ஆஸ்திரேலியா மீட் பை (meat pie )

ஆஸ்திரேலியர்கள் இறைச்சியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இறைச்சியை கொண்டு செய்யப்படும் மீட் பை ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு. இவர்கள் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மீட் பைகளை சாப்பிடுகிறார்கள்.

பயணங்களின் போதும் உணவகங்களிலும் இவர்கள் விரும்பி சுவைப்பது இதுவே. சூடான அல்லது குளிர்ந்த தக்காளி சாஸுடன் சேர்த்து இதை சாப்பிடுவது அளவில்லா ருசியை கொடுக்கும்.

நீங்களும் இங்கு சென்றால் இந்த உணவை சுவைத்து பாருங்கள். சுவைத்தவர்கள் கீழே அதன் ருசியை பற்றி சொல்லுங்கள்.

2. ஆஸ்திரியா: அபெல்ஸ்ட்ரூடெல் Apfelstrudel

இங்கு பிரபலமான இந்த உணவை ஆஸ்திரியர்கள் தங்கள் சாயங்காலம் காபியுடன் இதை சாப்பிடுவதை விரும்புகிறார்கள்.

வியன்னீஸ் ஆப்பிள் ஸ்ட்ரூடெல் அல்லது அபெல்ஸ்ட்ரூடெல் என அழைக்கப்படும் இது ஆப்பிளின் புளிப்பு சுவையுடன் இனிப்பான மாவு கலந்து பாரம்பரியமாக சுவை மாறாமல் செய்யப்படுகிறது. ஆஸ்திரியா சென்றால் நீங்களும் ஒருமுறை சுவைத்து பாருங்கள்.

3. பெல்ஜியம்: மவுல்ஸ் ஃப்ரைட்ஸ் Moules Frites

பெல்ஜியத்தின் தேசிய உணவு என்றே இதை சொல்லலாம். அவித்த சிப்பிகளுடன் உருளை கிழங்கு பிரைஸ் சேர்த்து தருகிறார்கள். சிப்பிகள் ஓட்டுடன் இருப்பது சிறப்பு.

வேகவைத்த சிப்பியில் சுவையை கூட்ட ஒருவிதமான மசாலாவை சேர்க்கிறார்கள். இதனால் இது மிகவும் அருமையான சுவையை கொண்டிருக்குமாம்.

பெல்ஜியம் சென்றால் சிப்பியுடன் இந்த உணவையும் சேர்த்து சுவைத்து பாருங்கள்

4. பிரேசில்: புடிம் pudim

நம்ம ஊரில் உள்ள புட்டிங் கேக் போல தானோ என நினைக்க வைக்கிறது. அனால் இதை கேக் போல் செய்து நடுவில் ஒரு ஓட்டையும் போடு வைத்திருக்கிறார்கள்.

அதிக சுவை கொண்ட இதில் கிரீமி சிறப் சுற்றி ஊற்றி வைத்திருப்பது இன்னும் சுவையை அதிகரிக்கிறது. இது மிகவும் மென்மையாக இருக்குமாம்.

பிரேசிலில் ஒவ்வொரு உணவகம்,வீடுகள் மற்றும்  கஃபே விலும் நீங்கள் இந்த உணவை காணலாம்.  பெயரோடு சுவையும் அருமை

5. கனடா பௌடின் poutin

பிரெஞ்ச்  ஃப்ரைஸ்,  கிரேவி, சீஸ் மற்றும் தயிர் இப்படி ஒரு காம்பினேஷனை யார்தான் விரும்ப மாட்டார்கள். அப்படி ஒரு சுவை இந்த சுவையான கலவை அமெரிக்காவில் கிடைத்தாலும் கனடாவில் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்குமாம்.

சில உணவகங்களில் 100 க்கும் மேற்பட்ட வகைகள்  உள்ளன நீங்கள் உங்கள் விருப்பம் போல பார்த்து வாங்கி சாப்பிடுங்க

6. இங்கிலாந்து: ஸ்டீக் மற்றும் கிட்னி பை

என்னது கிட்னி பையா ? கேட்கவே வித்தியாசமா இருக்கிறதே என நினைக்கிறீர்களா? ஆமாம் கொஞ்சம் வித்தியாசம்தான் இவர்கள் மாட்டு இறைச்சியுடன் ஆட்டு குட்டி அல்லது பன்றி குட்டியின் சிறுநீரகங்கள் இவைகளை சேர்த்து கொஞ்சம் வித்தியாசமாக தயார் செய்து கொடுக்கிறார்கள்.

ருசி ரொம்ப பிரமாதமாக இருக்குமாம். இத இவங்க பாரம்பரியமா பண்ணீட்டு வர்றாங்களாம். இங்கிலாந்து போனீங்கன்னா கொஞ்சம் ருசி பார்த்து சொல்லுங்க

7. பின்லாந்து: ஸ்கூக்கி சீஸ் Squeaky Cheese

பின்லாந்திற்கு தவிர்த்து வேறு எங்கும் நீங்கள் லைபாஜுஸ்டோ அல்லது ஃபின்னிஷ் ஸ்கூக்கி சீஸ் இருப்பதைக் காண முடியாது.

மெல்லிய சீஸ் பிறை பேனில் பொரித்து கிளவுட் பெர்ரி ஜாம் உடன் காபி சேர்த்து பரிமாறுகிறார்கள். வித்தியாசமான சுவையை கொண்டிருக்கும் இது உங்களை சீஸ் போல் உருகவைக்கும்.

8. பிரான்ஸ்: மெக்கரோன்ஸ் Macarons

பிரான்சில் அதிகம் விற்பனையாகும் இனிப்பு. இந்த கண்ணை கவரும் குக்கீ பல்வேறு சுவைகளில் கிடைக்கிறது.

இவை தயாரிப்பது மிகவும் கடினம் என்பதால் உலகப் புகழ்பெற்ற பேஸ்ட்ரி ஷாப் லடூரி யில் மட்டுமே தனித்துவமான சுவை கொண்ட மெக்கரோன்ஸ் கிடைக்குமாம்

9. கிரீஸ்: ஸ்பானகோபிடா

இந்த சுவையான கீரை ஸ்பானகோபிடா  கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கிரேக்க உணவு. நாட்டின் ஒவ்வொரு பேக்கரியிலும் புதிதாக தயாரிக்கப்பட்ட ஸ்பானகோபிடாவை நீங்கள் காணலாம்.

இது கீரை,வெங்காயம்,சீஸ்,முட்டை  சேர்த்து பிசைந்து நம்மூர் பப்ஸ் போல் மொறு மொறுவென கிடைக்கிறது. சுவையும் அருமையாக இருக்குமாம்

10. ஹங்கேரி கௌலாஷ் Goulash

ஹங்கேரியர்கள் கால்நடைகளை மலைகளில் ஓட்டிச்செல்லும் பொழுது இந்த உணவை முதலில் தயாரித்திருக்கிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் துருக்கியர்கள் படையெடுக்கும் வரை இது சிகப்பு நிறத்தில் இருக்காதாம்.

துருக்கியர்கள் இந்த உணவில் பாப்ரிக்கா என்னும் மிளகு தூளை உபயோகித்த பிறகே இதற்கு சிகப்பு நிறம் வந்ததாம். இது இறைச்சி,காய்கறிகள் மற்றும் பாப்ரிக்கா மிளகு தூள் சேர்த்து செய்யப்படும் ஒருவகை சூப்.

11. இத்தாலி: டீப் ஃப்ரைட் ஆலிவ்ஸ் Deep-Fried Olives

இத்தாலிய உணவுகள் என்றாலே நினைவுக்கு வரும் முதல் உணவுகள் பாஸ்தா மற்றும் பீஸ்ஸா. ஆனால் இங்கு சென்று பார்த்தால்தான் தெரியும் அவர்களின் பிடித்த உணவு டீப் ஃப்ரைட் ஆலிவ்ஸ் என்று.

இந்த உணவு தெற்கு பிராந்தியத்தில் அஸ்கோலி-பிசெனோ என்ற ஊரில் தோன்றியது, பின்னர் அது வடக்கே பரவியுள்ளது.  வித்தியாசமான நல்ல ஒரு சுவையை கொண்டிருக்குமாம்

12. ஜப்பான் ரமென்

ரமென்  என்பது ஜப்பானில் உள்ள ஒரு பிரபலமான உணவாகும். நீளமான சீனாவில் உருவாகும் கோதுமை நூடில்ஸ், இறைச்சி அல்லது மீன் சேர்ந்த குழம்பு,பன்றி இறைச்சி, நோரி என்னும் உலர்ந்த கடற்பாசி, வேகவைத்த முட்டை சேர்ந்த ஒரு கலவையான சூப் வகை இது.

சோயா சாஸ் அல்லது மிஸோவுடன் கலந்து சுவைக்கப்படுகிறது. ஜப்பானின் பிரபலமான இந்த உணவு அங்குள்ள ஒவ்வொரு பிராந்தியத்திலும் வித்தியாசமாக இருக்குமாம்.

13. மொராக்கோ: பாஸ்டில்லா Pastilla

கொஞ்சம் இனிப்பு கலந்த அற்புதமான சுவை கொண்ட இந்த பாஸ்டில்லா வின் ஆரம்பகால பாரம்பரிய முக்கிய மூலப்பொருள் புறா. புறாவை வறுத்து சாப்பிட்டிருக்காங்க. ஆனால் இப்போது இது முக்கியமாக கோழி, காடை அல்லது கார்னிஷ் கோழியுடன் தயாரிக்கப்படுகிறது.

கூடவே சர்க்கரை மற்றும் இலவங்கப்பட்டை முக்கியமாக சேர்க்கப்படுகிறது. இந்த உணவை சாப்பிடும் பொழுது இனிப்பு,உப்பு, காரம் வெண்ணையின் சுவை இவை அனைத்தையும் நீங்கள் ஒருசேர உணரலாம். இங்க போனீங்கன்னா ஒருவாட்டி இதை சுவைத்து பாருங்க

14. போலந்து: சோலோட்னிக் Poland: Chlodnik

இதனுடைய இளஞ்சிவப்பு  நிறமே அப்படியே உடனே சாப்பிட தூண்டும் அற்புதமான ஐஸ் பீட்ரூட் சூப். கூடவே சிவப்பு முள்ளங்கி, வெள்ளரி, பச்சை வெங்காயம், தயிர்,மோர் , வேகவைத்த முட்டை சேர்ந்த அற்புதமான கலவை.

இதனுடைய நிறம்தான் அனைவரையும் சாப்பிடத்தூண்டும் ஆரோக்கியமான சுவையான உனவும் கூட.

15. தென்னாப்பிரிக்கா: பில்டோங் Biltong

தென்னாப்பிரிக்காவில் உள்ள  பில்டோங் என்னும் இந்த பிரபலமான உணவானது மசாலா சேர்த்து உலர்த்தப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் ஆஸ்ட்ரிட்ச்சின் இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இங்கு இது ஒரு வழக்கமான சிற்றுண்டி. கொஞ்சம் வித்தியாசமாகதான் இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் இது பிரபல சிற்றுண்டியாம்

Related posts

1 comment

custom bracelets May 9, 2021 at 9:51 am

My brother recommended I may like this blog. He was once totally right.

This submit actually made my day. You can not believe just how much time I had spent for this
information! Thank you!

Reply

Leave a Comment