November 27, 2022
அழகு குறிப்புகள்

நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க சில உணவு பழக்கங்கள்

1.வாரம் இரு முறை உங்கள் உணவில் மீன் சேர்த்து கொள்ள வேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் குறைந்து ,இருதய நோயை தடுக்கும்.இளமையாக காணப்படலாம்.

2.தினமும் வேர் கடலை , 10 பாதாம் பருப்பு போன்ற கொட்டை வகைகளை சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையாக இருக்கலாம்.

3.தினமும் 5 வகை பலன்கள் , காய்கறிகள் சாப்பிட்டால் அதிலுள்ள `ஆண்டிஆக்ஸிடன்ட்கள்’ கேன்சர், இருதய நோய்கள் போன்ற மோசமான நோய்களைத் தடுக்கும்; காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரைச் சத்தையும் கொண்டுள்ளன.

4.காலை உணவும், இரவு உணவும் 11 மணியைத் தாண்ட வேண்டாம்.

5.சாப்பாடுகளுக்கு இடையே 3 மணி நேர இடை வெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.

  1. வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்கவேண்டாம். பிரெட், `பேக்கிங் உணவு’ வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.

7.சராசரியாக பெண்கள் 9 வகை மாவுச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும். ஒரு ரொட்டி, முட்டை அளவு உருளைக்கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம் .

8.தினமும் 2 நெல்லிக்காய்  வீதம் சாப்பிட வேண்டும்.

இவைகளை கடைபிடித்தால் நோய் நீங்கி என்றும் இளமையாக இருக்கலாம்.

Related posts

Leave a Comment