November 27, 2022
உடல்நலம்

உங்களுடைய விரல் நகங்கள் கூறும் உங்கள் நலம்…!

உடலில் எந்த உறுப்பில் நோய் ஏற்பட்டாலும் அவற்றை நகம் மிகத்தெளிவாக காட்டி விடுகின்றன. நம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாத கழிவுகள் தான் நகங்களாக வளர்கின்றன. கெரட்டின் என்னும் உடல் கழிவுதான் நகமாக வளர்கிறது.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப் பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது அழியாது.

நமது உடலில் நகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ரத்த ஓட்டம் கிடையாது. நகங்களின் ஆரோக்கியம் பல்வேறு வகையில் நம்முடைய உடல்நலனை வெளிப்படுத்துகிறது. அதில் மனநலனும் இணைந்தே காணப்படுகிறது.

ஏதாவது கவலை மனதில் இருந்தால், நம்மில் பலர் விரல் நகங்களை கடித்து துப்புவோம். ஒருவேளை சந்தோஷம் என்றால் பெண்கள் நகங்களில் வண்ணம் பூசிக்கொள்வார்கள். இதுதான் உலக வழக்க மாக உள்ளது.

ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் நகத்தில் இது போன்ற அடையாளங்கள் அல்லது அறிகுறிகள் இருந்தால், அவை எந்தெந்த நோயின் அறிகுறி என்பதை இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கலாம்.

மஞ்சள் நிற நகங்கள்:

உங்களுக்கு நீரிழிவு நோய் சார்ந்த பிரச்னைகள் இருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். ஹைபோ தைராடிசம் மற்றும் சோரியாசிஸ் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. வைட்டமின் அல்லது தாதுப் பற்றாக்குறையால் கூட நகங்கள் மஞ்சள் நிறங்களில் காட்சியளிக்கலாம். உங்களுடைய உணவுத் தேவையில் மல்டிவைட்டமின் சப்ளிமெண்டை சாப்பிடுவது சிக்கலை நிறுத்தக்கூடும்.

தானாக உடையும் நகங்கள்:

உங்களுடைய கை விரல் நகங்கள் அவ்வப்போது உடைந்துபோனால், தங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, வைட்டமின் ஏ மற்றும் சி குறைபாடு, ஹைப்போ தைராய்டிசம் போன்ற பிரச்னைகள் இருக்கலாம். துணி துவைக்கும், பாத்திரம் கழுவும் வேலைகளை அதிகளவில் செய்பவர்களுக்கும் அடிக்கடி நகங்கள் உடைந்து விழும். அவர்கள் அச்சப்பட வேண்டியது கிடையாது. எனினும், குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ளாத நேரங்களிலும் நகங்கள் உடைந்தால், உடனடியாக கவனியுங்கள். உரிய மருத்துவரைச் சந்தித்து, சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

வீங்கிய நகங்கள்:

கைவிரல் நகங்கள் வீங்கியிருத்தல் கிளப்பிங் நெய்ல்ஸ் என்று கூறப்படுகிறது. இதயக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், குடல் நோய், கல்லீரல் நோய், பிறவிக் கோளாறு, இதய உறை அழற்சி நோய், புற்றுநோய், செரிமானக் கோளாறு போன்ற நோய்களின் அறிகுறியாக இது உள்ளது. உங்களுடைய கை விரல்களில் இந்த பிரச்னை இருந்தால், அதை மருத்துவ முறைகளால் மட்டுமே சரி செய்ய முடியும். இரைப்பை குடல், எண்டோகிரைன் மற்றும் ஹைப்போ தைராடிசம் போன்ற பிரச்னைகள் காரணமாகவும் நகங்கள் வீக்கம் உருவாகலாம்.

வரிகளுடன் கூடிய நகங்கள்:

விரல் நகங்களில் இருக்கும் வரிகளுக்கு மன அழுத்தம், சிறுநீரகப் பிரச்னை மற்றும் தைராய்டு பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. நகங்களில் செங்குத்தாக காணப்படும் வரிகள் முதியோர்களின் விரல்களில் அதிகம் காணப்படுகிறது. இது புதிய உயிரிகள் உருவாவதால் ஏற்படுகிறது. உங்கள் தோலின் மேற்பரப்புக்கு கீழே, புதிய தோல் செல்கள் உற்பத்தியாகின்றன. நகங்களுக்கு கீழே புதிய தோல் உருவாகும் போது, இதுபோன்ற வரிகள் உருவாகின்றன.

கருப்பு வரிகளுடன் கூடிய நகங்கள்:

நகங்களில் கருப்பு கோடுகள் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. உடலில் பிளவுடன் கூடிய ரத்தப்போக்கு, இருதயத்தில் பிரச்னை, சோரியாஸிஸ், சோர்வு போன்ற பிரச்னைகளுக்கான முக்கிய அறிகுறியாக நகங்களில் காணப்படும் கருப்பு வரிகள் குறிப்பிடப்படுகின்றன.

சிலருக்கு சாதாரணமாகவே நகங்களில் கருப்பு வரிகள் காணப்படும். ஆனால் திடீரென ஒருசிலருக்கு விரல் நகங்களில் கருப்பு வரிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். ஒரு சிலருக்கு ஆண்டிபயாடிக்ஸ் கொடுத்தால் போதுமானதாக இருக்கும். பாதிப்பின் தன்மையை பொறுத்து, அறுவை சிகிச்சையும் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது.

நகங்கள் நீல நிறத்தில் காணப்பட்டால்:

நகங்கள் நீல நிறத்தில் காணப்பட்டால் அது செத்து போச்சு என்று அர்த்தம். அதற்கு போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் நீல நிறத்தில் மாறி விடும். இது நமக்கு இருக்கும் நுரையீரல் பிரச்சனை, எம்பிஸிமா போன்ற பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம். விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

Related posts

Leave a Comment